Categories

SHE – Seven Habits of Excellence - 7 Habits of Ultra-rich Performance

27/11/2023

1. MUTE – Maximizing Utility of Time & Energy (Plan, Work, Workout, Relax)
Time, Energy, & Money are the three key resources. They are interconnected. Using the resources called Time and Energy, we can increase Money. Where the focus goes, energy follows. Focus optimizes the use of time.
Proper planning, focused work with micro-breaks, and daily exercises can increase your ability to use Time and Energy effectively to increase your income.
2. UPS – Updating Proper Skills (learn, implement, & challenge yourself)
We must have a list of skills to improve to reach the top position in our career. For that, we must write down the answer to one simple question: ‘Where will I be after five years?" Then we will know the list of skills required to reach that position.
3. EV – Envision through எண்Vision (Analytics and Big Data)
“எண்Vision” means seeing the numbers clearly. Contemporary leaders must love numbers because numbers (data) are the most sophisticated method of storing and retrieving the past. If you have the ability to understand the relationship among the data, you can predict the future. If you can predict the future, you are the GOAT (greatest of all times).
4. STOP – Screen Time On Purpose
One of the sins of modern humans is unlimited access to the internet. Mobile phones, or smart phones, were invented to save time. Unfortunately, it works otherwise. Set a limit on screen time. You may have a lot of time to do something productive.
5. FIT – Fitness In Total (mind, body, network, & wealth)
Fitness in total is true fitness. There are four important aspects of fitness. 1. Mind: positive, assertive, and persistent. 2. Body: fit enough to complete your daily tasks with a higher level of energy. 3. Network—with complimenting, collaborative people who can create easy access to people and opportunities. 4. Wealth is the accumulation of the difference between your income and expenditure. One must have enough wealth at age 50 so that he or she is no longer required to work for basic necessities. It means that after age 50, no one should go for work on compulsion.
6. FOOT – Focus On One Thing
Humans cannot multi-task. We are very good at focused action and very weak at multi-tasking. Focusing on one thing is called optimizing. We can achieve greater things in our lives if we practice FOOT.
7. APP – Appreciate and Practice Politeness
No one wants to stay with an arrogant person. Everyone likes appreciation. If we develop the habit of appreciating and being polite, we become human magnets to attract the right people.

 

இப்போது L.K.G. செல்லும் குழந்தை முதல், C.E.O. வரை அனைவரும் உபயோக்கிக்கும் ஒரு சொல், ‘ஸ்ட்ரெஸ்'. உலகில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் எப்போதாவது தற்காலிகமாக வரும் இந்த ‘ஸ்ட்ரெஸ்' மனிதர்களுக்கு மட்டும், ஒட்டிப்பிறந்த ரெட்டை போல எப்போதும் இருப்பது ஏன்? உலகில் எங்குமே நிரந்தர மன அழுத்தம் இல்லை. அதை நமது செயல்பாடுகள் மூலம் நாம்தான் செயற்கையாக உற்பத்தி செய்கிறோம். 
இப்படி செயற்கையாக நாம் உற்பத்தி செய்து, நமது செயல்பாட்டை குறைக்கும் ‘மன அழுத்தத்தை’ சிறந்த பழக்கங்கள் மூலமே நீக்க முடியும். அழுத்தமில்லாத மனிதனின் செயல்பாடு, அற்புதமாக இருக்கும் என்பது வெற்றியாளரான உங்களுக்கு நிச்சயம் தெரிந்து இருக்கும்.
இன்றைய வாழ்விற்கு அவசியம் தேவைப்படும் 7 பழக்கங்களை பார்ப்போம்.
 
1. MUTE: Maximizing Utility of Time and Energy
நேரம், சக்தி மற்றும் பணம் ஆகிய மூன்றும், முக்கிய வளங்கள் ஆகும். இவை ஒன்றிற்கொன்று தொடர்புடையவை. நேரத்தையும், சக்தியையும் சரியாக பயன்படுத்துவதன் மூலம், நாம் நமது பணத்தை (வருமானத்தை) அதிகரிக்கலாம். எங்கு கவனம் குவிக்கப்படுகிறதோ, அங்கு சக்தி பாய்கிறது. கவனம், நமது நேரத்தை முழுமையாக பயன்படுத்துகிறது.
நமது நேரத்தை முழுமையாக பயன்படுத்த கவனம் அவசியம். நமது சக்தியை முழுமையாக பயன்படுத்த, ‘தேர்வு’ அவசியம். எந்த செயலை எப்போது செய்வது என்ற தேர்வு சரியாக இருந்தால், சக்தி பயனுள்ள வகையில் செலவழிக்கப்படும். வெற்றியும் கிடைக்கும். 
காலை எழுந்தது முதல், மதிய உணவு வரை, நமக்கு சக்தி அதிகமாக இருக்கும். மதிய உணவுக்குப் பின், சக்தி மெதுவாக குறையத் துவங்கும். எனவே, மதிய உணவுக்கு முன்பான பாதி நாள் மிக மிக முக்கியம். 
ஒரு நாளின் கடினமான வேலைகளையும், ஒரு நாளின் 65% வேலையையும், மதிய உணவுக்கு முன்பாக முடித்து விடுங்கள். மனநிறைவான நாளாக அது இருக்கும். மதிய உணவுக்கு பிறகு உங்களுக்கு சக்தி தேவைப்பட்டால், Intermittent Break எனப்படும் சிறு ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள். இது உங்களுக்கு மீண்டும் சக்தியை கொடுக்கும். 
மதிய உணவுக்கு முன் 65% வேலைகளை முடிக்க வேண்டும் என்றால்,  அதிகாலை எழுந்து, விரைவில் வேலையை துவங்க வேண்டும். அதிகாலை எழ வேண்டும் என்றால், இரவில் நீண்ட நேரம் கண்விழித்து இருக்கக் கூடாது. குறிப்பாக ஒளிரும் திரைகளை 8 மணிக்கு மேல் பார்க்கக் கூடாது என்பது உங்களுக்கு தெரிந்த விஷயம்தானே?
 
2. UPS – Updating Proper Skills (learn, implement, & challenge yourself)
நமது தொழிலில் உச்சத்தை அடைய வேண்டும் என்றால், நாம் வளர்த்துக்கொள்ள வேண்டிய திறன்களின் பட்டியல் நம்மிடம் தயாராக இருக்க வேண்டும். அதற்கு, “அடுத்த ஐந்து வருடங்களில் நீ எங்கே இருக்க விரும்புகிறாய்?” என்ற ஒரு எளிய கேள்விக்கான விடை நம்மிடம் தயாராக இருக்கவேண்டும். இதற்கான விடை எழுதிவிட்டால், அந்த இடத்தை அடைவதற்கு தேவைப்படும் திறன்களின் பட்டியலும் தெளிவாகத் தெரியும்.
 
3. EV – Envision through எண்Vision (Analytics and Big Data)
“எண்Vision” என்பது, எண்களை தெளிவாக பார்க்கும் திறன் ஆகும். நவீன உலகின் தலைவர்கள் எண்களை (தகவல்களை) விரும்பியே ஆகவேண்டும். ஏனென்றால், எண்கள்தான் நிகழ்வுகளை மிகத்துள்ளியமாக குறித்துவைத்து,மீண்டும் பார்க்கவைக்கும் அதிநவீன வழிமுறை.  எண்களுக்கு இடையே உள்ள தொடர்பை உங்களால் பார்க்க முடிந்தால், உங்களால் எதிர்காலத்தை எளிதில் கணிக்க முடியும். உங்களால் எதிர்காலத்தை கணிக்க முடிந்தால்,நீங்கள்தான் உங்கள் தொழிலில் தலைசிறந்த வெற்றியாளர். 
 
4. STOP – Screen Time On Purpose
கணக்கற்ற வலைதளத்திற்கான அனுமதி, இன்றைய மனிதர்களின் பாவங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. அலைபேசி மனிதர்களின் நேரத்தை மிச்சப்படுத்துவதற்கான கண்டுபிடிக்கப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக அது எதிர்மறையாகவே செயல்படுகிறது. உங்கள் ஒளிரும் திரையை பார்ப்பதற்கு ஒரு கட்டுப்பாடை வைத்துக்கொள்ளுங்கள். உபயோகமான செயல்களை செய்வதற்கு உங்களுக்கு அதிக நேரம் கிடைக்கலாம். 
 
5. FIT – Fitness In Total (mind, body, network, & wealth)
முழுமையான தகுதி என்பதே உண்மையான தகுதி. நான்கு வகையான தகுதிகள் முழுமையை உண்டாக்குகின்றன. 1. மனம்: நேர்மறை சிந்தனை, உறுதி நிலை, மற்றும் தொடர் முயற்சி. 2. உடல்: உங்களது அன்றாட வேலைகளை, அதீத சக்தியுடன், முழுமையாக  முடிக்கும் அளவிற்கு உங்கள் உடல் தகுதியாக இருக்க வேண்டும். 3. தொடர்புகள்: உதவக்கூடிய, இணைந்து செயல்படக்கூடிய  மனிதர்களுடன் நெருக்கமான தொடர்பில் இருப்பவர்கள் தங்களுக்கு தேவையான மனிதர்களையும், வாய்ப்புகளையும் எளிதில் சென்றடைகிறார்கள். 4. வளம்: உங்கள் வரவுக்கும் செலவுக்கும் இடையே உள்ள வித்தியாசமே வளமாக மாறுகிறது. ஒருவர் 50 வயதுக்கு மேல், அடிப்படைத் தேவைகளுக்காக வேலை செய்யவேண்டிய கட்டாயம் இல்லாத அளவுக்கு செல்வம் சேர்த்து வைத்து இருக்க வேண்டும். அதாவது, ஒருவர் 50 வயதுக்கு மேல், கஷ்டப்பட்டு வேலைக்கு செல்லாமல், இஷ்டப்பட்டு வேலைக்கு செல்ல வேண்டும்.
 
6. FOOT – Focus On One Thing
மனிதர்களால் ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்ய முடியாது. ஒரு வேலையில் கவனமாக செயல்பட்டால், நாம் சிறந்த செயலை செய்யமுடியும். ஆனால், பலவேலைகளில் கவனம் இருந்தால், நாம் உருப்படியாக எதுவும் செய்ய முடியாது. கவனம் செலுத்துவதே உண்ணதம். FOOT-ஐ செயல்படுத்தினால், நாம் ஒவ்வொருவரும் நமது தொழிலில் உச்சத்தை அடையலாம்.
 
7. APP – Appreciate and Practice Politeness
திமிர்பிடித்த மனிதருடன் ஒருவரும் இருக்க விரும்புவதில்லை. அனைவருக்கும் பாராட்டு பிடிக்கும். நாம் பணிவாக இருப்பதோடு, பிறரை பாராட்டும் குணத்தையும் கொண்டு இருந்தால், நாம் ஒரு மனித காந்தமாக மாறி சரியான நபர்களை கவர்ந்து இருப்போம். 

Author

avatar

Prasanna Venkatesan

Success Coach, Psychologist, Writer.

V. Prasanna Venkatesan is having 16 years of experience in selling & 13 years of experience in Training & Development. He holds an MS in Psychology. He is coaching individuals and business units in India and abroad for their personal and professional success.

He has coached over 120,000 individuals who include officials of many top organizations, self-employed and businessmen. From a street smart salesman, he has reached the senior management position of some of the top companies like Madura Coats, Reckitt Benckiser, Bajaj Allianz, and ING in 16 years and left his lucrative job with rich experience and many achievements & awards to take up Training & Coaching with lots of passion.

He is an Author of 11 books in Tamil, 3 in English and they are well received and admired by people from all walks of life.