Categories

Green Human Resource Management (GHRM)

05/12/2023

The latest development in human resource management is Green HRM. This is to ensure corporate social responsibility for sustainable development. focusing mainly on educating the employees on an environment-friendly approach, including wise usage of resources.

Green HRM supports the creation of Green Workforce, workforce that understands, appreciates, and supports ecological wellbeing. The human resources department plays a significant role in corporate initiatives for green organisations. It extends the boundaries of conventional HRM practices towards more sustainable environment strategies.

Green HRM helps reduce energy consumption, reduce pollution, reduce ecological waste and makes the best use of refurbished HR goods, equipment, and techniques. It aims to increase workers' engagement in a work environment that allows the company to function in an environmentally friendly manner.

The HR practices in GHRM include the inclusion of tasks related to environmental protection in the job description, assessing the green competencies among the candidates, developing disciplinary norms for green guidelines, conducting environmental audits, reducing paper use in offices, and rewarding the green performers.

In the year 2018, a study was conducted among 300 organisations in Poland. GHRM initiatives among these entities had a significant impact on economic expansion along with environment-friendly actions.  

They found that the implications of GHRM contribute to the development of the unique resource, “green” human capital, which features above-average environmental sensitivity and efficiency. Therefore, they concluded that GHRM is the basis for the development of a continued competitive advantage for organizations.

Green HRM motivates employees to take initiatives for greater efficiency, lowering costs, and reducing carbon footprints by using electronic equipment, car sharing, job sharing, teleconferencing, virtual meetings, recycling, and creating energy-efficient office spaces. This not only reduces the cost but also makes a greater contribution to the environment. In turn, GHRM initiatives enhance employee engagement.

The Green HRM enables employers and manufacturers in building brand image and reputation. This helps the employees and organizations to use the natural resources more economically. 

Benefits of GHRM:
1. Reducing costs without losing talent,
2. Building a healthy environment to work in and live in,
3. Creating a culture of having concern for the wellbeing of co-workers and employees,
4. Enhances higher job satisfaction,
5. Improved retention rate of employees,
6. Promotes employee morale,
7. Improves the public image of the organization and its employees,
8. Enables you to place your organization and products in the global market,
9. It helps the organization take advantage of governmental schemes and subsidies.
 

தமிழில்:


 பசுமை மனிதவள மேலாண்மை (GHRM)
 
 மனித வள மேலாண்மையின் சமீபத்திய வளர்ச்சி, பசுமை HRM ஆகும். இது நிலையான வளர்ச்சிக்கான சமூகப் பொறுப்பை சிறிய மற்றும் பெரிய நிறுவனங்களிடையே உறுதி செய்யும் அணுகுமுறை ஆகும். முக்கியமாக வளங்களை புத்திசாலித்தனமாக பயன்படுத்துதல் உட்பட, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பணியாளர்களுக்கு கற்பிப்பதில் இந்த வழிமுறை கவனம் செலுத்துகிறது.
பசுமை HRM ‘பசுமை பணியாளர்களை’ உருவாக்குவதை ஆதரிக்கிறது. இது சுற்றுச்சூழல் நலனை புரிந்துகொண்டு, அதை பாராட்டி, ஆதரிக்க ஊக்கமளிக்கிறது. பசுமை நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் நிறுவனங்களின் முன்னெடுப்புகளில், மனித வளத் துறை குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. இது வழக்கமான HRM நடைமுறைகளின் எல்லைகளை மேலும் விரிவுபடுத்தி, நிலையான சுற்றுச்சூழல் உத்திகளை நோக்கி செயல்படத் தூண்டுகிறது.

பசுமை HRM ஆற்றல் நுகர்வை குறைக்க உதவுகிறது, மாசுபாட்டை குறைக்கிறது, சுற்றுச்சூழல் கழிவுகளை குறைக்கிறது மற்றும் புதுப்பிக்கப்பட்ட பொருட்கள், உபகரணங்கள் மற்றும் நுட்பங்களை சிறந்த முறையில் பயன்படுத்துகிறது. நிறுவனம் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் செயல்பட உதவி செய்கிறது. மேலும் நல்ல பணிச்சூழலை உண்டாக்குவதில் தொழிலாளர்களின் ஈடுபாட்டை அதிகரிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

GHRM இல் உள்ள HR நடைமுறைகள், பணி விவரத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான பணிகளைச் சேர்ப்பது, வேலைக்கு விண்ணப்பித்தவர்கள் இடையே பசுமைத் திறன்களை மதிப்பீடு செய்தல், பசுமை வழிகாட்டுதல்களுக்கான ஒழுங்குமுறை விதிமுறைகளை உருவாக்குதல், சுற்றுச்சூழல் தணிக்கைகளை நடத்துதல், அலுவலகங்களில் காகித பயன்பாட்டைக் குறைத்தல் மற்றும் பசுமையை மேம்படுத்தும் ஊழியர்களுக்கு வெகுமதி அளித்தல் ஆகியவை அடங்கும்.

2018 ஆம் ஆண்டில், போலந்தில் உள்ள 300 நிறுவனங்களிடையே ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இந்த நிறுவனங்களில் GHRM முன்முயற்சிகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன், நிறுவனங்களின் பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது.

GHRM இன் தாக்கங்கள் தனித்துவமான, வளமான "பசுமை பணியாளர்களின்" வளர்ச்சிக்கு பங்களிப்பதாக அவர்கள் கண்டறிந்தனர், இந்த முயற்சியில் சராசரிக்கும் அதிகமான சுற்றுச்சூழல் உணர்திறன் மற்றும் செயல்திறனைக் கொண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. GHRM  என்பது, அதை செயல்படுத்தும் நிறுவனங்களுக்கு, பிற நிறுவனங்களைவிட, தொடர்ச்சியான நன்மையை தந்தது என்று அவர்கள் அறிந்துகொண்டனர்.

பசுமை HRM, மின்னணு சாதனங்களை உபயோகிப்பதன் மூலம் காகித செயல்பாட்டை குறைப்பது, கார் பகிர்வு, வேலைப் பகிர்வு, தொலைதொடர்பு, மெய்நிகர் சந்திப்புகள் (ஆன்லைன் மீட்டிங்), மறுசுழற்சி மற்றும் ஆற்றல்-திறனுள்ள அலுவலக இடங்களை உருவாக்குதல் ஆகியவற்றின் மூலம் அதிக செயல்திறன், செலவுகளைக் குறைத்தல் மற்றும் கார்பன் தடயங்களைக் குறைத்தல் போன்ற முயற்சிகளை மேற்கொள்ள ஊழியர்களை ஊக்குவிக்கிறது. இதனால் செலவு குறைவது மட்டுமின்றி சுற்றுச்சூழலுக்கும் அதிக பங்களிப்பை அளிக்கிறது. இதையொட்டி, GHRM முயற்சிகள் பணியாளர் ஈடுபாட்டை மேம்படுத்துகின்றன.

பசுமை HRM ஆனது முதலாளிகள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு பிராண்ட் இமேஜ் மற்றும் நற்பெயரை உருவாக்க உதவுகிறது. இது பணியாளர்கள் மற்றும் நிறுவனங்கள் இயற்கை வளங்களை சிக்கனமாக பயன்படுத்தவும் உதவுகிறது.

GHRM இன் நன்மைகள்:
1. திறமையை இழக்காமல் செலவுகளைக் குறைத்தல்,
2. வேலை செய்வதற்கும், வாழ்வதற்கும் ஆரோக்கியமான சூழலை உருவாக்குதல்,
3. சக பணியாளர்கள் மற்றும் பணியாளர்களின் நலனில் அக்கறை கொண்ட கலாச்சாரத்தை உருவாக்குதல்,
4. அதிக வேலை திருப்தியை அதிகரிக்கிறது,
5. ஊழியர்களின் தக்கவைப்பு விகிதம்  (retention) மேம்படுத்தப்பட்டது,
6. பணியாளர் மனநலனை அதிகரிக்கிறது,
7. நிறுவனம் மற்றும் அதன் ஊழியர்களின் பொதுவான பிம்பத்தை மேம்படுத்துகிறது,
8. உலகளாவிய சந்தையில் உங்கள் நிறுவனம் மற்றும் தயாரிப்புகளை எடுத்துச்செல்ல உதவுகிறது,
9. அரசாங்கத் திட்டங்கள் மற்றும் மானியங்களைப் பயன்படுத்திக் கொள்ள GHRM நிறுவனங்களுக்கு உதவுகிறது.
 

Author

avatar

Prasanna Venkatesan

Success Coach, Psychologist, Writer.

V. Prasanna Venkatesan is having 16 years of experience in selling & 13 years of experience in Training & Development. He holds an MS in Psychology. He is coaching individuals and business units in India and abroad for their personal and professional success.

He has coached over 120,000 individuals who include officials of many top organizations, self-employed and businessmen. From a street smart salesman, he has reached the senior management position of some of the top companies like Madura Coats, Reckitt Benckiser, Bajaj Allianz, and ING in 16 years and left his lucrative job with rich experience and many achievements & awards to take up Training & Coaching with lots of passion.

He is an Author of 11 books in Tamil, 3 in English and they are well received and admired by people from all walks of life.