Categories

360 Degree Optimisation of Work & Life

28/11/2023

Recently, I read an article about CEOs quitting their jobs to spend time with their families. Most of them felt that they had burned out a lot in building their careers. Mr. Sanjay Poonen, a 52-year-old Indian-American of VMware, had quit his job as COO and started spending time with his family, reading books, cycling, and donating to charity. 

Mr. Poonen was afforded the right to make the decision. But how many of us can take such a call? Even rich businessmen and businesswomen must stay in their businesses to keep them going. Only a very few can find a suitable successor and take a complete break. 

In a CNBC article, it is mentioned that 35% of millionaires think it’s going to take a miracle to retire. If this is the status of millionaires, there is no need to explain it to others. Very few people in the world have a strong financial framework to say bye to their business or profession at any time.
            So what others can do? Lose their life till 60, or till they find a successor to run the business? Life must be lived. To live, we must not wait for that magical moment to happen. We can make life more meaningful if we have the desire to and have a plan.
            There are four areas of our lives. They are professional, personal, private, and social. One must spend enough time in each area to ensure all other areas are explored without guilt.

Professional Life: The word success is wrongly understood as referring to dedicating an entire life to the profession. It may be good for the profession. But it is self-deception for the individual doing it. You must have a profession that can advance your retirement status as quickly as possible. Retirement status means a state in which you are able to say bye to your profession at any time.
If you have decided to dedicate your life entirely to others, you can still forget about your enjoyment and continue to invest your entire life in your profession. A very small percentage of people can say that they have dedicated their entire lives to others. So we must ensure we spend adequate quality time in our profession to ensure retirement in 20 years from the date of starting the career or business.
Personal: This is our family life. Personal life includes spending quality time with family members, and relatives. Quality time includes play, picnics, chit-chat, and many other activities that can make your people happy and be together.
Private: A very important area of life most of us forget and regret later. Some space is exclusively for you. You may or may not include others in this space. This area includes solo travel, reading, and doing something without demanding others to join you.
Social: People's interactions and relationships with others in their group or culture are referred to as their "social life." It includes all facets of interpersonal relationships, including conversations with friends, neighbours, and strangers. Communication, shared activities, and a sense of belonging within a social group are all part of social life. It is essential in forming a person's identity, morals, and general wellbeing.
            If one can spend quality time in all four areas of his life, he achieves 3600 optimization of work and life. The time we allocate to each area need not be equal. It must be sufficient. Work-life balance is a weak strategy. Balancing is tough and stressful. One must learn to optimize it. Which means spreading adequate time without thinking of other areas. 

Five tips for work-life optimization:1. Set clear boundaries: Establish boundaries between work and personal time. Don't merge work into your leisure time or the other way around. This promotes equilibrium and guards against burnout.

2. Set task priorities: Determine which duties are most crucial for your personal and professional lives. It is better to avoid few unwanted activities to fulfil an important one. You deserve to live without guilt. 

3. Focus and Time Management: Develop time management skills by allocating your time for work, breaks, and personal activities in an effective manner. Make use of calendars and to-do lists as tools to help you keep focused and organized. I recommend to use mobile phone calendars to note your tasks as they are easy to access. Focus on ONE THING at a time. This is called optimizing. We don't need to spend hours to do things better. Even a few undisturbed minutes can give greater results than distracted hours. 

4. Say NO: It's important to know when to say no and to avoid taking on more than you can handle. To keep things in perspective, politely turn down further work or social commitments when your plate is already full.

5. Take care of yourself: A healthy balance between your physical and mental health is essential for overall enjoyment and productivity. To refuel and perform at your best in both your personal and professional life, schedule time for self-care activities, physical activity, and relaxation.

 

In Tamil

சமீபத்தில் ஒரு கட்டுரை படித்தேன். அதில், பல CEOக்கள் தங்கள் குடும்பத்துடன் நேரம் செலவிடவேண்டும் என்பதற்காக, அவர்களது வேலையை ராஜினாமா செய்கிறார்கள் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. திரு. சஞ்ஜை பூனன் எனும் 52 வயது, இந்திய வம்சாவழி அமெரிக்கர் , VMware எனும் நிறுவனத்தில் செய்துவந்த தனது COO வேலையை ராஜினாமா செய்துவிட்டு, அவரது நேரத்தை குடும்பத்தினருடனும், விருப்பமான புத்தகங்களை படிப்பதிலும், சைக்கிள் ஓட்டுவதிலும், பிறருக்கு தானம் செய்வதிலும் செலவழிக்கத் துவங்கி உள்ளார். 
                  திரு. பூனனுக்கு இந்த முடிவை எடுக்கும் தகுதி இருந்தது. அதனால் உடனே எடுத்துவிட்டார். ஆனால், நம்மில் எத்தனைபேர் இதுபோன்ற ஒரு முடிவை எடுக்கும் நிலையில் உள்ளோம்? பணக்கார வணிகர்கள்கூட, அவர்களது வணிக நிறுவனம் செயல்படவேண்டும் என்றால், அவர்கள் தொடர்ந்து வணிகத்தில் இருக்க வேண்டி உள்ளது. ஒருசிலர் மட்டுமே, தகுதியான தலைவர்களை தேர்ந்தெடுத்து, நிறுவனத்தை ஒப்படைத்து, முழுமையான ஓய்வு எடுக்க முடிகிறது.
                  CNBCல் வந்த ஒரு கட்டுரையில், 35% சதவீத செல்வந்தர்கள் (8 கோடி சொத்து மதிப்புக்கு மேல் உள்ளவர்கள்), ஏதாவது மாயாஜாலம் நடந்தால்தான் தாங்கள் ஓய்வுபெற முடியும் என்று நினைக்கிறார்கள் என்று எழுதப்பட்டு இருந்தது. செல்வந்தர்களுக்கே இந்த நிலை என்றால், மற்றவர் நிலையை நான் சொல்லி நீங்கள் புரிந்துகொள்ள வேண்டியது இல்லை. எந்த ஒரு நேரத்திலும் தங்கள் வேலை அல்லது வணிகத்திற்கு குட்பை சொல்லி, முழுமையாக ஓய்வு எடுக்கும் வலுவான பொருளாதார நிலை அல்லது வணிக கட்டமைப்புடன், ஒரு சிலர் மட்டுமே உள்ளனர் என்பது ஒரு கசப்பான உண்மை. 
                  பிறர் என்ன செய்வது? 60 வயது வரை தங்கள் வாழ்க்கையை ஓடுவதில் தொலைப்பதா? வாழ்க்கையை வாழவேண்டும். அந்த மாயாஜால நிகழ்வு நடக்குமென்று காத்து இருக்கக் கூடாது. ஆசையும், திட்டமும் இருந்தால், நமது வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்ற முடியும்.
                  நம் வாழ்வில் நான்கு பகுதிகள் உள்ளன. அவை வேலை, சொந்த வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கை, சமூக வாழ்க்கை ஆகியன. ஒருவர் இந்த நான்கு பகுதிகளிலும் போதுமான அளவு நேரம் செலவிட்டால் மட்டுமே,வாழ்க்கையை குற்ற உணர்வின்றி அனுபவிக்க முடியும். 
வேலை: வேலை அல்லது வணிகத்திற்கு ஒருவரது வாழ்வை முழுமையாக அற்பணிப்பதே வெற்றி என்ற வார்த்தைக்கு அர்த்தம் என தவறாக கற்பிக்கப்பட்டு உள்ளது. அது வேலைக்கு நல்லதாக இருக்கலாம். ஆனால், அந்த தனி நபருக்கு அது சுய-மோசடி. உங்களது ஓய்வுத் தகுதியை விரைவாக கொடுக்கும் அளவுக்கு உங்களுக்கு வேலை அல்லது வணிகம் இருக்க வேண்டும். ஓய்வு தகுதி என்பது, எந்த ஒரு நேரத்திலும் உங்கள் வேலை அல்லது வணிகத்திற்கு குட்பை சொல்லும் தகுதிநிலை ஆகும். வேலை செய்யாமல் இருக்கும் நிலை அல்ல.
                  உங்கள் வாழ்க்கை முழுவதையும் பிறருக்காகவே அற்பணிப்பது என்று முடிவு செய்துவிட்டால், பிற சந்தோஷங்களை மறந்து, உங்கள் வாழ்வை முழுமையாக பணிக்கே அற்பணித்துவிடுங்கள். அதை நான் தடுக்கவில்லை. இப்படிப்பட்டவர்கள் மிகச்சிறு சதவீதம்தான். எனவே, வேலை அல்லது வணிகத்தை துவங்கி 20 ஆண்டுகளில் ஓய்வுத் தகுதியை அடையும் அளவுக்கு, நமது வேலை அல்லது வணிகத்தில் நேரத்தை முதலீடு செய்ய வேண்டும். 

சொந்த வாழ்க்கை: இது நமது குடும்ப வாழ்க்கை. சொந்த வாழ்க்கை என்பது, நமது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன், தரமான நேரத்தை செலவழிப்பது ஆகும். இதில் விளையாட்டு, சுற்றுலா, அரட்டை, மற்றும் பல்வேறு செயல்கள் அடங்கும். இது இவர்களை மகிழ்ச்சியடையச் செய்யும் மற்றும் எப்போதும் கூடவே இருக்கும் மனதிருப்தியை கொடுக்கும். 

தனிப்பட்ட வாழ்க்கை: நம்மில் பலர் இதை மறந்து, பின்நாளில் வருந்தும் வாழ்வின் ஒரு மிகமுக்கிய பகுதி இந்த தனிப்பட்ட வாழ்க்கை ஆகும். உங்களுக்கென தனித்துவமான ஒரு வாழ்வியல் வெளி இது. இந்த வெளியில் பிறரை நீங்கள் அனுமதிக்கலாம் அல்லது மறுக்கலாம். இந்த பகுதியில் தனித்த பயணம், வாசிப்பு மற்றும் பிறரை நிர்பந்திக்காமல் நீங்கள் தனியாகச் செய்யும் செயல்கள் அடங்கும். 

சமூக வாழ்க்கை: இது உங்களது குழு அல்லது சமூகத்தில் இருக்கும் பிறருடன் உறவாடுவது ஆகும். நண்பர்கள், அக்கம்பக்கத்தினர் மற்றும் புதியவர்களுடன் பழகுவது போன்ற தனிமனிதர்களுக்கு இடையேயான உறவு மேம்பாடு இந்த சமூக வாழ்க்கையில் அடங்கி உள்ளது. தகவல் தொடர்பு, இணைந்து செயல்படுவது, சமூகத்தில் உறுப்பினராக உணர்வது, ஆகியவை சமூக வாழ்க்கையின் அங்கங்கள் ஆகும். இது சுய அடையாளம், ஒழுக்கம், மற்றும் மனநலம் ஆகியவற்றிற்கு அவசியமாக இருக்கிறது.
                  ஒருவர் இந்த நான்கு பகுதிகளிலும் போதிய அளவு நேரம் செலவழித்தால், அவர் வேலை மற்றும் வாழ்க்கையை 3600 மிகையாக்கி உள்ளார். இந்த நான்கு பகுதிக்கும் சரி அளவு நேரம் ஒதுக்க வேண்டியதில்லை. ஆனால், போதுமான அளவு இருக்க வேண்டும். வேலை-வாழ்க்கை சமாளிப்பு (work-life balance) என்பது ஒரு தவறான, கடினமான, நீர்த்துப்போன கோட்பாடு ஆகும். வேலை-வாழ்க்கை மிகுதியாக்குதல் என்பதே சரி. மிகுதியாக்குதல் என்பது வேறு சிந்தனை இல்லாமல், போதுமான நேரத்தை ஒவ்வொரு பகுதியிலும் செலவிடுவது ஆகும். 

வேலை-வாழ்க்கை மிகுதியாக்குதலுக்கு 5 யோசனைகள்:
1. தெளிவாக எல்லைகளை தீர்மானியுங்கள்: வேலை மற்றும் சொந்த வாழ்விற்கான நேரத்தை தீர்மானியுங்கள். இரண்டிற்கான நேரத்தையும் கலந்துவிடவோ, சமரசம் செய்துகொள்ளவோ வேண்டாம். வெறுப்புணர்வு வராமல் இரண்டையும் சமநிலையில் இந்த எல்லை வைத்திருக்கும். 

2. முக்கியத்துவம் அளியுங்கள்: உங்கள் சொந்த வாழ்க்கை மற்றும் வேலையில் மிகமுக்கிய செயல்கள் என்ன என்பதை தீர்மானியுங்கள். ஒரு மிகமுக்கிய செயலை செய்துமுடிக்க, சில அவசியமற்ற செயல்களை தவிர்ப்பது நல்லது. குற்றஉணர்வு இல்லாமல் நீங்கள் வாழத் தகுதியானவர். 

3. கவனமும், நேரமேலாண்மையும்: வேலை, விடுப்பு, மற்றும் சொந்த வாழ்க்கை ஆகியவற்றிற்கு போதிய நேரம் ஒதுக்குவதன் மூலம் நேரமேலாண்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். அலைபேசியில் உள்ள காலெண்டரை உபயோகிப்பது நல்லது. அதை எளிதில் பார்க்கலாம். இது உங்களது கவனத்தை அதிகரிக்கும். ஒரு நேரத்தில் ஒரு வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். இதுதான் மிகுதியாக்குதல். கவனமில்லாமல் முடிக்க மணிக்கணக்கில் ஆகும்  ஒரு வேலையை, முழுக்கவனத்துடன் செய்தால் சில நிமிடங்களில் முடித்துவிடலாம். கவனச்சிதறல் இல்லாத சில நிமிடங்கள், கவனச்சிதறலுடன் கூடிய மணிகளை விட ஆகச்சிறந்த செயல்பாட்டை கொடுக்கிறது. 

4. முடியாது என்று சொல்லுங்கள்: எப்போது, எதற்கு ‘நோ’ சொல்ல வேண்டும் என்பது மிகமிக முக்கியம். உங்களால் சமாளிக்க முடியாத விஷயங்களுக்கு முடியாது என்று சொல்வதே நல்லது. நீங்கள் பிஸியாக இருக்கும்போது, கூடுதல் வேலைகளுக்கும், சமூக வாழ்வின் சிலவற்றிற்கும் ‘நோ’ சொல்வதே நல்லது. 

5. உங்களை கவனித்துக் கொள்ளுங்கள்: முழுமையான மகிழ்விற்கும், செயல்பாட்டிற்கும், மனம் மற்றும் உடல் நலன் மிக முக்கியம். உங்களை பராமரிக்கவும், உடல் ஆரோக்கியத்திற்கும், ஓய்வு எடுக்கவும், போதிய நேரம் ஒதுக்குங்கள்.

Author

avatar

Prasanna Venkatesan

Success Coach, Psychologist, Writer.

V. Prasanna Venkatesan is having 16 years of experience in selling & 13 years of experience in Training & Development. He holds an MS in Psychology. He is coaching individuals and business units in India and abroad for their personal and professional success.

He has coached over 120,000 individuals who include officials of many top organizations, self-employed and businessmen. From a street smart salesman, he has reached the senior management position of some of the top companies like Madura Coats, Reckitt Benckiser, Bajaj Allianz, and ING in 16 years and left his lucrative job with rich experience and many achievements & awards to take up Training & Coaching with lots of passion.

He is an Author of 11 books in Tamil, 3 in English and they are well received and admired by people from all walks of life.