உங்கள் கனவை நிஜமாக்க உதவுகிறோம்..
விரைவில் கடந்துபோகும் வாழ்வில், நீங்களாகவே வாழ்வின் அனைத்து அத்தியாவசிய திறன்களையும் கற்பது கடினம்.
ஒரு ஏழை இளைஞன், தனது பட்டப்படிப்பிற்குப் பிறகு, ஒரு விற்பனையாளனாக தனது வேலையைத் துவங்கினான். முதல் 7 வருடங்களில் அவனுடைய பணியில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. அவனுடைய ரூம்மேட், கீழ்மட்டத்திலேயே தங்கிவிடாமல், வாழ்வில் உயரவேண்டும் என்ற உத்வேகத்தை அவனுள் புகுத்தினான். ஆனால், அவனுக்கு வாழ்வில் உயரத் தேவையான அத்தியாவசியத் திறன்களைக் கற்பதற்கு மிகக்குறைந்த வாய்ப்புகளே இருந்தது. அநேக நேரங்களில் அவனுடைய உயர் அதிகாரிகளிடம் இருந்தே கற்கவேண்டி இருந்தது. இது ஒருவரிடம் இருந்தோ, ஒருசிலரிடம் இருந்தோ கற்பதற்குச் சமம்.
அத்தியாவசியத் திறன்களை பெரும்பாலும் அவனாகவே கற்கவேண்டி இருந்தது. இதற்கு அதிக விலை கொடுக்க வேண்டி இருந்தது. அவனுக்கு பயிற்சி வகுப்புகள், சுயசரிதைகள் மற்றும் வழிகாட்டும் புத்தகங்கள் இந்த திறன்களை வளர்க்கும் மிகச்சரியான கற்றல் ஆதாரமாக இருந்தன. இந்த திறன்களை கற்று வளர்த்துக்கொண்ட பிறகு, அவனது பணியில் வளர்ச்சி உண்டானது. 16 வருடங்களில், ஒரு சாதாரணமான விற்பனையாளனாகத் துவங்கி, தலைமைச் செயல்பாட்டு அதிகாரியாக உயர இந்த திறன்களே அவருக்கு உதவின.
தலைசிறந்த திறன் மேம்பாட்டு பயிற்சியாளர்களால் உந்தப்பட்டு, பலரின் திறனை மேம்படுத்த வேண்டும் என்று முடிவு செய்து, வெர்டிகல் ப்ரோக்ரஸ் (Vertical Progress) எனும் திறன் மேம்பாட்டு நிறுவனத்தை 27 ஜனவரி 2011ல் அவர் துவங்கினார். நிரூபணமான கருத்துக்களை மட்டுமே பயிற்சியாக கொடுக்கவேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அப்படிப்பட்ட நிரூபணமான திறன் மேம்பாட்டு கோட்பாடுகளைத் தேடும் சமயம், உளவியல்தான் அத்தியாவசியத் திறன்களுக்கு அடிப்படை அறிவியல் என்பதைப் புரிந்துகொண்டார். அவர் மென்திறன் எனப்படும் திறன்களின் அறிவியல் பெயரைத் தெரிந்துகொண்டார். அதற்குப் பெயர் சமூக-உளவியல் திறன்கள். அவரது நிறுவனத்தின் பயிற்சியை வலுப்படுத்த, உளவியலில் முதுகலை அறிவியல் பட்டமும் பெற்றார். மேலும், பயிற்சிக் கருத்துக்களை மெருகூட்டவும், மேம்படுத்தவும், பல வெற்றிகரமான பயிற்சியாளர்கள், படைப்பாளர்கள் மற்றும் அறிவுசார் பங்குதாரர்களை இணைத்துக்கொண்டார்.
வெர்டிகல் ப்ரோக்ரஸ் அணியின் ஒருங்கிணைந்த முயற்சியின் விளைவாக, இந்த நிறுவனம், சமூக-உளவியல் திறன்கள் மேம்பாட்டுப் பயிற்சியில், இந்தியா, மலேஷியா, சிங்கப்பூர், ஶ்ரீலங்கா, மற்றும் கனடா நாட்டிலுள்ள பங்கேற்பாளர்களிடம் நற்பெயரை சம்பாதித்தது. வெர்டிகல் ப்ரோக்ரஸ் நிறுவனம் சென்னையை தலைமை இடமாகக் கொண்டு, கோலாலம்பூரில் கிளையைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. 10 வருடங்களில், இதுவரை சுமார் 1 லட்சம் நபர்களுக்கு அவர்களின் கனவை நனவாக்க உதவியுள்ளோம். மிகச்சாதாரணமாகத் துவங்கிய இந்த பயணம், எங்களது பயிற்சியில் பங்கேற்றவர்களின் வெற்றிக்கதைகளுடன் வெற்றி நடை போடுகிறது.
அடுத்தபடியாக, அடுத்த படியாக, எங்களது 11ம் வருடத்தில், நாங்கள் மின்னனு கற்றல் முறையில் அடியெடுத்து வைக்கிறோம். வெர்டிகல் ப்ரோக்ரஸ் பயிற்சியாளர் மற்றும் பயிற்சி பெறுபவர் ஆகிய இருவருக்குமே நன்மை செய்யும் தளமாக உருவாகி உள்ளது. எங்களது வாக்குறுதி, நேர்மையாகவும்,வெளிப்படையாகவும் இருப்பதே.
Success Coach, Psychologist, Writer.
V. Prasanna Venkatesan is having 16 years of experience in selling & 13 years of experience in Training & Development. He holds an MS in Psychology. He is coaching individuals and business units in India and abroad for their personal and professional success.
He has coached over 120,000 individuals who include officials of many top organizations, self-employed and businessmen. From a street smart salesman, he has reached the senior management position of some of the top companies like Madura Coats, Reckitt Benckiser, Bajaj Allianz, and ING in 16 years and left his lucrative job with rich experience and many achievements & awards to take up Training & Coaching with lots of passion.
He is an Author of 11 books in Tamil, 3 in English and they are well received and admired by people from all walks of life.